இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும், தன்னால் நாட்டுக்கு செய்யப்பட்ட வேவையில் ஒரு வீதம் கூட கிரிக்கெட் நிறுவன தலைவரால் ஆற்றப்படவில்லை எனவும், முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் கிரிக்கெட் பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் அவுஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக 10 நாட்களுக்கு செயற்படவே வாக்குறுதியளித்தாகவும், முழு தொடருக்கும் ஆலோசகராக செயற்பட அந்த அணியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தான் நிராகரித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குக் காரணம் எதிரணியாக இலங்கை இருந்ததே எனவும் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித சேகாநாயக்கவை மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை, தான் மறுப்பதாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.
0 Comments