ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பஸ்ஸில் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் பஸ் சாரதியினதும் நடத்துனரினதும் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனர்கள் பஸ் கட்டணத்தை முறையாக அறவிடுகின்றனரா மற்றும் சீருடைகள் அணிகின்றனரா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமந்த்ர தெரிவித்தார்.
தொடர்ச்சியான 3 தடவைகள் இந்த தவறை செய்தால் அரை சொகுசு பஸ்கள் சாதாரன பஸ் வண்டிகளாக மற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments