பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாளை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
நாளை கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்பு தினம் என்பதனால் நாளைய தினம் கல்வி அமைச்சை சுற்றிவளைத்து போராட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
0 comments: