உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கினிகத்ஹேன நகரில் தலைகீழாக நின்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களான ஹெல பிரிய நந்தராஜா மற்றும் டக்லஸ் தர்மசிறி ஆகியோரே இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு ஒருவருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் தேர்தல் நடத்தாமையினால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
0 Comments