மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சுமார் 39 ஆசிரியர்களில் 38 ஆசிரியர்கள் இன்றுவரை சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகளும் அரசியல் தலையீடுகளும் நிகழ்ந்துள்ளதால் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பல பாடசாலைகள் ஆசிரியர்கள் இன்றி மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
குறித்த கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்ட பலர் இன்னும் தங்களது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படும் அதேவேலை மட்டக்களப்பு நகர பாடசாலைகளில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் கடமையாற்றிவருவதாகவும் அவர்களில் சிலரை கஸ்டப்பிரதேசங்களுக்கு இடம்மாற்றிய போதும் அவர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கு மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக இடமாற்றம் பெற்ற பாடசாலைகளுக்கு செல்லாது உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கடந்த 06ம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
மட்டக்களப்பு சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றக்குறையை நிவர்த்தி செய்யகோரி மாணவர்களும் பெற்றோhர்களும் பாடசாலையை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலை பிரதான வாயிலை மூடி வீதிக்கு இறங்கிய பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் தங்களது பாடசாலையில் நிலவும் 30 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
‘பிரதேச அரசியல் வாதிகளே மக்களை ஏமாற்றவேண்டாம’; ‘வலயக்கல்விப் பணிப்பாளரே வலயத்தை சீரழிக்காதே’ ‘மாகாணக்கல்விப் பணிப்பாளரே இனப்பாகுபாடு எதற்கு’ ‘கல்வி அமைச்சரே தூக்கம் எதற்கு’ ‘எதிர்கால அரசியலுக்காக ஏழைமாணவர்களின் கல்வியை சீரழிக்காதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கல்குட கல்வி வலய கல்விப்பணிப்பாளர் சிறிஸ்கந்தராஜாவிடம் முரண்பட்டுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் ‘தங்களது பாடசாலைக்கு வருகைதரவேண்டிய 12 ஆசிரியர்கள் இன்னும் வரவில்லை என்றும் குறித்த பாடசாலைக்கு உடனடியாக 30 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தங்களது பிள்ளைகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும’; தெரிவித்ததுடன் கல்குடா கல்வி வலயத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் தற்போது கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 123 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது பதிளிடுகள் இன்று நிகழ்த்தப்பட்ட இந்த இடமாற்றமானது திட்டமிட்ட ஒரு செயலாகும் கல்குடா கல்வி வலயத்திற்கு 1710 ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றது ஆனால் 1307 ஆசிரியர்கள்தான் தற்போது கடமையாற்றிவருகின்றனர் என்று கூறிய வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் ஏன் 123 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு அனுமதித்திருந்தார் இது வலயக்கல்விப்பணிப்பாளரின் அசமந்தப்போக்கையே காட்டுகின்றது என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கல்குடா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் அவர்கள்
எமது கல்வி வலயத்தில் 123 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டனர் இடமாற்றம் பெற்றவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட 39 ஆசிரியர்களில் ஒருவரைத்தவிர இதுவரை எவரும் வரவில்லை கல்குடாவில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பாடசாலைக்கு முதற்கட்டமாக 15 ஆசிரியர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
123 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துவிட்டு வெறும் 39 ஆசிரியர்களை மட்டும் கல்குடா வலயத்திற்கு வழங்கியுள்ளமையானது எந்தவகையில் நியாயமானது? அதை விட பதிலீடாக வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் செல்வாக்கின் ஊடாக இடமாற்றம் செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இன்னும் வருகைதராமல் உள்ளமையானது கிழக்கு மாகாணசபையின் கல்வி நிர்வாகத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளையும் அரசியல் தலையீடுகளைம் கூட்டமைப்பினரின் தலைமைத்துவத்தின் குறைபாடுகளையுமே எடுத்துக்காட்டியுள்ளதாக புத்திஜீவிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.





0 Comments