‘வைகாசிப்பொங்கல்’ என அழைக்கப்படும் கண்ணகை அம்மனின் வைகாசித் திருக்குளிர்த்திச் சடங்கு கடந்த திங்களன்று 16ஆம் திகதி ஆரம்பமாகியது.
இதனால் கண்ணகைஅம்மன் ஆலயங்களுள்ள கிராமங்கள் புதுப்பொலிவுபெற்றுள்ளதுடன் பக்திமயமாக காட்சியளிக்கின்றன.
கிழக்கில் குறிப்பாக வந்தாறுமூலை மகிழடித்தீவு முதலைக்குடா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு செட்டிபாளையம் களுவாஞ்சிக்குடி மகிழுர் கல்முனை காரைதீவு வீரமுனை பட்டிநகர் தம்பிலுவில் போன்ற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
வீதியிருமருங்கிலும் அம்மனின் கட்அவுட்டுகள் தோரணம் சோடனைகள் அலங்கார மின்விளக்குகள் மாவிலை குருத்தோலைகள் என அச்சூழல் மனோரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.
காரைதீவில் சடங்கு ஆரம்பம்!
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தின் வருடாந்த வைகாசிச்சடங்கு கடந்த திங்களன்று கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியது.
பின்பு தினமும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலும் சடங்குப்பூஜையும் இடம்பெறும்.
பின்பு தினமும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலும் சடங்குப்பூஜையும் இடம்பெறும்.
23ஆம் திகதி திங்கட்கிழமை பொங்கலுக்கு நெல்குற்றும் நிகழ்வும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திருக்குளிர்ச்சி பாடுதலும் இடம்பெறும்.
எட்டாம்சடங்கு 30ஆம் திகதி நடைபெறஏற்பாடாகியுள்ளது.
எட்டாம்சடங்கு 30ஆம் திகதி நடைபெறஏற்பாடாகியுள்ளது.
இந்டைமுறைகள் ஆலயத்திற்கு ஆலயம் சற்று வேறுபாடுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments