வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனி மற்றும் 108 சங்காபிஷேகம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இவ்பாற்குட பவனியானது வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை பிரதான வீதி, விபுலானந்தர் வீதி, புதுக்குடியிருப்பு வீதி வழியாக புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் சென்று பின்னர் கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
இதன்போது அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகமம், சங்காபிஷேகம் என்பன இடம்பெற்றதுடன், யாக பூசையும் இடம்பெற்றது.
கடந்த மாதம் 22ம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகி, எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் 24 நாட்கள் மண்டல பூசைகள் என்பன இடம்பெற்றது.
இதில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பக்த அடியார்கள் ஐநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதலை வேண்டி தலைமையில் பாற்குடமேந்தி மழைக்கு மாத்தியில் ஈடுபட்டனர்.
இக்கிரியைகள் யாவும் கிரயாபூசகர, ஆச்சாரியா, இளஞ்சுடர் சிவஸ்ரீ.நவரெத்தின முரசொலிமாறன் குருக்கள் மற்றும் ஆலய பூசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள் ஆகியோரால் நடைபெற்றது.
பால் குடபவனி மற்றும் சங்காபிஷேகம் முடிவுற்றதும் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதாம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாலயமானது வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய மக்களின் சின்னக் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்கிழமை ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இடம்பெற்று வியாழக்கிழமை கல்யாணக் கால் நாட்டும் நிகழ்வு மற்றும் சனிக்கிழமை தீமிதிப்பு நிகழ்வுடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.





0 Comments