நாட்டில் தற்போது நிலவி வருகின்ற வெப்பமான காலநிலை காரணமாக இலங்ககையில் பல பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கி விழுகின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலமைக்கு அதிக வெப்பமும் காரணமாக இருக்கின்றது. வைத்தியர்களின் ஆலோசனைப்படி நாட்டில் நிலவி வருகின்ற அதிக வெப்பம் காரணமாக
வெயில் நேரத்தில் திரிவதைத் தவிர்க்குமாறு அறிவுவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டில் பல மாகாணங்களில் பாடசாலையை பி.ப 12.00 மணிக்கு மூடிவிடுவதற்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை பி.ப. 12.00 மணிகக்கு மூடி விடுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தேசிய பாடசாலைகளில் பி.ப 1.30 மணிக்கே பாடசாலைகள் நிறைவடைகின்றன. மாகாண பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு ஒரு நீதியும் தேசிய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அநீதியும் காட்டப்படுவது ஏன் ? என பலரும் அங்கலாய்கின்றனர். இதற்குப் பொறுப்பு வாய்ந்த மேலதிகாரிகள் அரசியல் வாதிகள் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நீதியைப் பெற்றுக் கொடுப்பது தலையாய கடமையாகும்.
0 Comments