Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பிலான அறிக்கை சபாநாயகரிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இதனுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவால் குழுவொன்று அமைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments