Home » » கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிக்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்

கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிக்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்

கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000மில்லியன் ரூபா நிதிக்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
 இன்று வியாழக்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 கிழக்கு மாகாணசபையில் உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கிழக்கு மாகாணசபையில் உள்ளுராட்சி ஆணையாளர்,நிர்வாக செயலாளர்கள் மாற்றப்பட்டு வேறு நியமனங்கள் வழங்கப்பட்டன.
 நிதிச்செயலாளர் ஒய்வுப்பெற்றுள்ள நிலையில் புதிய செயலாளர் நியமனத்திற்காக அடுத்த நிலையில் இருப்பவர் ஒரிரு மாதங்களில் ஓய்வுபெற்றுச்செல்லவுள்ளதால் அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர் நியமிப்பதற்கான நடவடிக்கையினை பிரதம செயலாளரும் ஆளுனர் எடுத்துவந்த நிலையில் கிழக்கு மாகாண அமைச்சரமை அவசரமாக ஓய்வுபெற்றுச்செல்லவுள்ளவருக்கு ஆறு மாதகால சேவை நீடிப்பு வழங்கியுள்ளது.
 இது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது,இதற்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு வழங்கியுள்ளமையானது கவலை தரும் விடயமாகவே நோக்கப்படவேண்டியுள்ளது.
 இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்திசெய்வதற்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் 5000மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
 இந்த நிதியை முறையாகப்பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்படவேண்டும்.இந்த நிதியானது முமுமையாக கல்வி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவேண்டும்.இந்த நிதி திரும்பிச்செல்லும் நிலையினை ஏற்படுத்தாதவகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |