Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனர்த்த நிவாரணம்: இரண்டு போர்க் கப்பல்களில் நிவாரணங்களை அனுப்பியது இந்தியா

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கடற்படைக் கப்பல் ஏற்கனவே கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஐஎன்எஸ் சுகன்யாவில் உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்டு வரும் நிலையில், விரைவில் அது புறப்பட்டுச் செல்லும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments