Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

களனி கங்கையின் நீர் மட்டம் குறைந்து வருகின்றது : வெள்ளமும் குறைகிறது

களனி கங்கையின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதுடன் கொழும்பு மற்றும் புறநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையும்  குறைவடைந்துள்ளது.
இதன்படி பல பிரதேசங்களில் ஒரு அடி வரை வெள்ளம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறாக கடுவலை , களனி , களனிமுல்லை , சேதவத்த , வெல்லம்பிட்டி , ஒருகொடவத்த , அங்கொட , வத்தளை , மட்டக்குளி மற்றும் பாலத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன் அந்த பகுதிகளில் பல இடங்கள் 10 அடிக்கும் மேல் வெள்ள நீரால் மூழ்கியிருக்கின்றன.
இதனால் அந்த பிரதேசங்களிலுள்ள ஆயிரக்காணக்கான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் மாடி வீடுகள் உள்ளோர் வெளியேறாது அங்கேயே தங்கியிருப்பதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
அத்துடன் கொழும்பு – அவசாவளை உள்ளிட்ட வீதிகள் பலவற்றில் 10 அடிக்கும் மேல் வெள்ள நீர் நிற்கும் நிலையில் அந்த வீதிகளில் வாகன போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டு படகு போக்குவரத்துக்களே இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் களனி கங்கையின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Post a Comment

0 Comments