Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ளத்திலும் வீடுகளுக்குள் திருடர்கள் கைவரிசை : 15 பேர் சிக்கினர்

வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் சம்பங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் அந்த வீடுகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் இரவில் அந்த வீடுகளுக்குள் புகுந்து திருடர்கள் வீட்டிலுள்ள பொருட்களை திருடி செல்வதாக தெரிய வருகின்றது.
குறிப்பாக வெள்ளம்பிட்டி மற்றும் ஒருகொடவத்த பகுதியிலேயே இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் கடற்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள போதும் இந்த திருட்டுச் சம்பங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை இவ்வாறாக திருட்டில் ஈடுபட்ட 15 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக வட கொழும்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments