அரநாயக்கவில் கடந்த செவ்வாய்க்கிழமை மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட மலைப்பகுதியிக்கு அருகிலுள்ள மற்றுமொரு மலையில் நேற்று மாலை பாரிய மண்சரிவுவொன்று ஏற்பட்டுள்ளது.
கபரகல எனப்படும் மலையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் 3 கிலோ மீற்றருக்கும் அதிக தூரம் இந்த சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் ஏற்கனவே அந்தப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமையினால் அந்த மண்சரிவால் உயிரிசேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments