கொழும்பு நகரில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள வௌ்ள நீர் தற்போது வடிந்தோடி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் நாகலகங் வீதியின் நீர் மானியில் 7.05 வீதாமாக நீர் மட்டம் பதிவாகியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இன்னும் நீர்மட்டம் முழுமையாக குறைவடையவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டது.
நிலவிய சீரற்ற வானிலையினால் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இதேவேளை வங்காளா விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரொஆனு சூறாவளி தற்போது காங்கேசன்துறை பிரதேசத்தின் 1100 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியது.
இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் தெரிவித்தார்.
0 comments: