Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரநாயக்க மண்சரிவில் காணாமல் போனோரின் எண்ணிக்கையில் குழப்பம்

அரநாயக்க மண்சரிவு அனர்த்தத்தில் சரியாக எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற எண்ணிக்கை தொடர்பாக குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
மண்சரிவு இடம்பெற்ற பின்னர் காப்பாற்றப்பட்டவர்களும் மற்றும் மண்சரிவின் போது ஓடித் தப்பியவர்களும் பல்வேறு இடங்களில் தங்கியிருப்பதால் எத்தனை பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாமென உறுதியான எண்ணிக்கையை யாராலும் கூற முடியாதுள்ளது.
Sri Lanka Floods
ஆனால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைப்படி குறித்த கிராமங்களில் வசித்த 200 குடும்பங்கள் தொடர்பான தகவல்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 பேர் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் அவர்கள் காணாமல் போயுள்ளதாக நம்புவதாகவும் மீட்புப்பணிக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
02
இதேவேளை மண்சரிவுக்கு இலக்கான பகுதியில் 135 குடும்பங்கள் இருந்ததாகவும் அவர்களில் 19 குடும்பங்கள் நேற்று வரை கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments