Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்றும் கடும் மழை பெய்யும்

நாட்டில் பல பாகங்களில் இன்றைய தினமும்  மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம்  தெரிவித்துள்ளது.
அனேகமான பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும்  அதிக மழை பெய்யலாமென எதிர்பார்ப்பதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் , மத்தி , சப்ரகமுவ , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த மழையின் போது இடி மின்னல் ஏற்படலாமெனவும் இதனால் மின்னலால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments