Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

23ஆம் திகதி அரச விடுமுறை இல்லை?

எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த அரச விடுமுறை  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் காரணமாக வழங்கப்படாது போகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைந்துள்ளன.
சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் வெசாக் போய விடுமுறை என்பதனால்  அதற்கான விடுமுறையை திங்கட்கிழமை வழங்குவதற்கு ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது.  இருப்பினும் நிலைமையை கருத்திற்கொண்டு அந்த தீர்மானம் வாபஸ் பெறப்படலாம் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments