Home » » மே தினத்தில் , மைத்திரிக்கா , ரணிலுக்கா மஹிந்தவுக்கா என பலப்பரீட்சை நடத்தவுள்ள அரசியல் கட்சிகள்

மே தினத்தில் , மைத்திரிக்கா , ரணிலுக்கா மஹிந்தவுக்கா என பலப்பரீட்சை நடத்தவுள்ள அரசியல் கட்சிகள்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தை தமது பலத்தை காட்டும் தினமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தவுள்ளது. இதன்படி வழமைக்கு மாறாக அரசியல் கட்சிகளின் பேரணிகளும் மற்றும் கூட்டங்களும் தமது ஆதரவு பலத்தை காட்டவுள்ளன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு அணியினர் இருவேறு பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தி ஒன்றுக்கொன்று சவால்களாக பலத்தை காட்ட முயற்சிப்பதுடன் அவற்றுக்கு சவாலாக ஐ.தே.க கூட்டத்தையும் பேரணியையும் நடத்தவுள்ளது.
அதேபோன்று மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், இ.தொ.காவும் அங்கு ஏட்டிக்கு போட்டியாக கூட்டங்களை நடத்தி பலப்பபரீட்சை நடத்தவுள்ளன.
இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி சமனல மைதானத்தில் நடத்தப்படவுள்ளதுடன் அதற்கான பேரணிகள் காலியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ”நாட்டை வெல்லும் கரம் உலகை வெல்லும் நாளை” என்ற தொனிப்பொருளில் நடத்தப்படவுள்ளது
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அதற்காக பேரணிகள் மாளிகாவத்தை, ஆமர் வீதி, மருதானை, பொரளை ஆகிய பிரதேசங்களிலிருந்து ”ஆர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு” என்ற தொனிப்பொருளில் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தொழிற்சங்கங்களும் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் கிருளப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேரணி நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட எம்.பிக்கள் பலரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதுடன் 50ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் கலந்துக்கொள்ளவுள்ளன.
ஜே.வி.பியின் செம் மேதினக் கூட்டம் கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கிருளப்பனை பீ.ஆர்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் இதற்கான பேரணி தெஹிவளை எஸ்.த.ஜயசிங்க மைதானத்திலிருந்து நடைபெறவுள்ளது.
இதேவேளை அமைச்சர்களான மனோகணேசன், திகாம்பரம் மற்றும் இராஜங்க அமைச்சர் இராதாகிருஷ்னன் ஆகியோரின் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலை நகரிலும், பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தெரிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் நுவரெலியா நகரிலும் தமிழரசு கட்சியின் மேதின கூட்டம் யாழ்பாணத்திலும், தமிழ்  தேசிய மக்கள் முன்னனியின் மே தினக் கூட்டம் பருத்தித்துறையிலும் நடத்தப்படவுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |