Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாவட்ட மட்டத்திலான அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது

இவ் வருடத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் 29.04.2016 இல் கல்குடா கல்வி வலயத்தில் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சிறிஸ்கந்தராசா தலைமையில் நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயம் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையினைப் பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் இவ் வெற்றியினைத் தொடர்ந்து மேலும் பல சாதனைகளை மாகாண, தேசிய மட்டங்களில் பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன். மாவட்ட மட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயம்  தனி, குழு நிகழ்வுகளில்  9  போட்டிகளில் முதலாம் நிலையினையும்,  13  போட்டிகளில் இரண்டாம் நிலைகளையும்,  6 போட்டிகளில் மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டமை வலயத்திற்கும், அப் பாடசாலைகளுக்கும் பெருமையினை சேர்த்துள்ளது.
இதற்காக முன் நின்று உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரையும் பட்டிருப்பு வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர், திரு.க.குணசேகரம் அவர்களையும் மனமுவர்ந்து பாராட்டியுள்ளார்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு கிடைத்த பெறுபேறுகள்.

15 1 வாசிப்பு மட்/பட்/திருப்பழுகாமம் விபுலாநந்தா வித் கனகலிங்கம் - பேமசாலினி நிலை  02
17 1 ஆக்கத்திறன் வெளிப்பாடு மட்/பட்/பெரியகல்லாறு மெ.மி.த.பெ.பாடசாலை குணதாசன் - மாதுரிக்கா நிலை 01
18 1 பேச்சு மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி சுரேசன் - டிலக்ஷி நிலை 03
19 2 பேச்சு மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி ஜெகஜீவன் - டினோஜ் நிலை 02
20 3 பேச்சு மட்/பட்/உதயபுரம் தமிழ் வித் கமால்றி – யதுர்சனா நிலை 02
21 4 பேச்சு மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி நந்தகுமார் - ஷதுரயன் நிலை 01
22 5 பேச்சு மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி சத்தியநாதன் - அகிலன் நிலை 02
23 1 பாவோதல்  மட்/பட்/ஓந்தாச்சிமட்ம் சிறி விநாயகர் வித் குருகுலசிங்கம் - அஜிகன் நிலை 02
24 2 பாவோதல் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி வடிவேல் - பத்மலோஜனி நிலை 01
25 3 பாவோதல் மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி வித் புண்ணியமூர்த்தி – கிசாந்தி நிலை 03
26 4 பாவோதல் மட் பட்/பெரியபோரதீவு பாரதி வித் ரவீந்திரன் - கிசாலினி நிலை 02
27 5 இலக்கிய விமர்சனம் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி ம.வி விஜயரெத்தினம் - அஜந்திகா நிலை 02
28 1 இசையும் அசைவும் மட்/பட்/திருப்பழுகாமம் விபுலாநந்தா வித் கோபாலகிருஷ்ணன் - நிகாசினி நிலை 02
29 2 இசை தனி மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித் தங்கேஸ்வரன்- டிலானி நிலை 01
30 3 இசை தனி மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி கௌரிபாலன் - நிதர்சனா நிலை 01
31 4 இசை தனி மட்/பட்/மகிழூர் சரஸ்வதி வித் சுந்தரலிங்கம் - ரிபோசானா நிலை 02
32 5 இசை தனி மட்/பட்/துறைநீலாவணை ம. வித் வீரகுமார் - திலக்சினி நிலை 03
35 2 நடனம் தனி மட்/பட்/கோட்டைக்கல்லாறு ம. வித் கோவிந்தராசா – ஹோசினி நிலை 02
37 4 நடனம் தனி மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி கிருஸ்ணன் - சர்மினி     நிலை 02
38 5 நடனம் தனி மட்/பட்/களுதாவளை.ம.வி விஸ்வலிங்கம் - ராஜினி நிலை 02

திறந்த போட்டிகள்
இசை குழு - மட்/பட்/தேற்றாத்தீவு.ம.வி  3 ஆம் நிலை
இசை குழு II - மட்/பட்/தேற்றாத்தீவு.ம.வி  3 ஆம் நிலை
நடனம் குழு I - மட்/பட்/களுதாவளை.ம.வி  1 ஆம் நிலை
நாட்டிய நாடகம் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி  1 ஆம் நிலை
நாட்டார் பாடல் மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்  2 ஆம் நிலை
மேடை நாடகம் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி ம.வி 3 ஆம் நிலை
வுpல்லுப் பாட்டு மட்/பட்/செட்டிபாளையம் ம.வி  1 ஆம் நிலை
தமிழரிவு வினா விடை மட்/
பட்/குருமண்வெளி சிவசக்தி ம.வி 1 ஆம் நிலை

Post a Comment

0 Comments