தனிமையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரை சாரதியினால் கடத்திச் செல்ல முயற்சித்த சம்பமொன்று காலி நாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய குறித்த பெண் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தான் இறங்க வேண்டிய இடத்தில் பெண்ணை இறக்காது சாரதி அவரை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.
இவ்வேளையில் இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி 3கிலோமீற்றர் தூரம் அந்த முச்சக்கர வண்டி பயணித்த போது பெண் வண்டியிலிருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பிரதேசத்திலுள்ள சீ.சீ.டி.வி கமாரவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments