நேற்று மாலை கொழும்பில் திடீரென ஏற்பட்ட மின் தடையின் போது மின் உயர்த்தியில் (லிப்ட்) சிக்கிக்கொண்ட பெண்ணொருவர் தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று கொம்பனித்தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொம்பணித்தெருவில் அமைந்துள்ள ரயில்வே வீடமைப்பு தொகுதியில் குறித்த பெண் மின் உயர்த்தியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வேளையில் மின் உயர்த்தி இடைவழியில் இயங்காது நின்றுள்ளது. இது தொடர்பாக பெண் வீட்டாருக்கு தொலைபேசியினூடாக தெரிவித்ததையடுத்து இது தொடர்பாக அவர்களால் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் குறித்த மின் உயர்த்தியை உடைத்து பெண்ணை மீட்டெடுத்துள்ளனர்.
0 Comments