மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கிராம சேவையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சு.விக்னேஸ்வரன் (33வயது)என்ற கிராம சேவையாளரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மகிழுர் பிரதேசத்தினை சேர்ந்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments