Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் சூறை: 4 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

மாத்தளை மாவட்டத்திலுள்ள லக்கல பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட சமயத்தில் கடமையிலிருந்த 4 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இசசம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே நேற்று அதிகாலை கடமையிலிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற போது மது போதையில் இருந்துள்ளார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரியவருகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது நால்வரும் நித்திரையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தின் போது அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்குள் பிரவேசித்த ஒருவர், பாதுகாப்புப் பெட்கத்தின் திறப்பைப் பயன்படுத்தி அதற்குள் வைக்கப்பட்டிருந்த ஐந்து கைத்துப்பாக்கிகளையும், ஒரு ரி-56 ரக தன்னியக்கத் துப்பாக்கியையும் கைப்பற்றிச் சென்றுள்ளார்.
சூறையாடப்பட்ட துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும், இக்கொள்ளையின் பின்னணியை அறிந்துகொள்வதற்காகவும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுவருட தினத்தில் அதிகாலை இடம்பெற்ற இந்த துணிகர சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments