Advertisement

Responsive Advertisement

இங்கிலாந்து செல்லும் இலங்கை டெஸ்ட் அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன

எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருப­துக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்கான அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அடுத்த மாதம் 4 ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்நி­லையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 17 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று முன்தினம்(27) இரவு அறிவித்தது.
அதன்படி அஞ்சலோ மெத்தியூஸ் தலைவராகவும், தினேஷ் சந்திமால் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை காயத்தினால் அவதிப்பட்டு வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவிற்கு 3 மாதங்கள் ஓய்வை வழங்குவதற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து செல்லும் டெஸ்ட் அணி வீரர்களின் விபரம்:-
மெத்தியூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத்தலைவர்), தசுன் சானக, தம்மிக்க பிரசாத், தனஞ்சய டி சில்வா, தில்ருவான் பெரேரா, திமுத் கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கெளஷால் சில்வா, குஷல் மெண்டிஸ், திரிமன்னே, மிலிந்த சிறிவர்த்தன, நிரோஷன் திக் வெல்ல, நுவன் பிர தீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மால்.

Post a Comment

0 Comments