றக்பி வீரர் வசிம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எதிராகவும் சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
வசிம் தாஜூதீன் கொலையை மறைத்த குற்றத்துடன் என்.கே.இலங்ககோனுக்கு தொடர்பிருப்பதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தாஜுதீனைக் கொலை செய்தவர் யார்? என்பது என்.கே.இலங்ககோனுக்கு நன்கு தெரியும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments