பொறுப்பு கூறுதல் விடயத்தில் இலங்கை அக்கறை காட்ட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை தொடர்பான அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய அரசாங்கம் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனநாயக ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் மேலும் முனைப்பு காட்ட வேண்டுமென இந்த அறிக்கையில் முக்கியமாக வலியுறுத்தியுள்ளது.
0 Comments