Advertisement

Responsive Advertisement

அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் போதும் ஜனாதிபதியாகவே இருந்தேன்: மகிந்த பதில்

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த தனது போட்­டி­யாளர் விரும்பும் பாது­காப்புக் குழுவைத் தெரிவு செய்து ஹெலிக்­கொப்டர் மூலம் ஊருக்கு செல்ல அனு­மதி அளித்­த­தாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் கூறப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­படும் கருத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மறுத்­துள்ளார்.
தேர்­தலில் தோல்­வி­ய­டைந்து அல­ரி­மா­ளி­கையில் இருந்து வெளியேறும் போது, இலங்கை ஜனா­தி­பதி பதவி இருந்­தது தன் வசம் என அவர் பிர­பல ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்­டுள்ளார்.
ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­ய­டைந்த பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கண்­டு­கொள்ள முடி­யாது போனதால், ரணில் விக்­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் தனது பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்­களை தீர்­மா­னித்துக் கொண்­ட­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
“நான் ஹெலி­கொப்­டரில் சென்ற போது தேர்தல் முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை, தேர்­தல்கள் ஆணை­யாளர் உத்­தி­யோ­க­பூர்வ முடிவை அறி­வித்­தி­ருக்­கவும் இல்லை, அப்­போது சிறி­சேன பொது வேட்­பாளர், அவரை என்னால் கண்டு கொள்ள முடி­ய­வில்லை, பின்னர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து விட்டு காலை 6.00 மணிக்கு வெளி­யே­றினேன்.
இதன்­படி எனது பாது­காப்பு குழு­வி­ன­ருடன் அன்று கொழும்பில் இருந்து வெளியே­றிய போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட இலங்­கையின் அப்­போ­தைய ஜனா­தி­பதி நானே” என, மஹிந்த ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
மேலும் தேர்தலில் தோல்வியடைந்த பின்னும் தொடர்ந்தும் பதவியில் இருக்க முற்பட்டதாக வெளியான செய்திகளையும் அவர் இதன்போது மறுத்துள்ளார்.

Post a Comment

0 Comments