Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாஜுதின் கொலை விசாரணை மூடி மறைத்த பொலிஸ் அதிகாரி கைது

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில்  நாராஹேன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபரான சிந்தக பெரேரா என்பவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்  இவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2012ஆம் ஆண்டில் வசீம் தாஜுதின் நாரஹேன்பிட்டிய பகுதியில் காரொன்றில் எரிந்த நிலையில் சடலாமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அப்போது அது விபத்து என கூறப்பட்ட போதும் தற்போதைய ஆட்சியில் அது கொலையே என்பதற்கான ஆதரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments