Home » » தமிழீழப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன்! உறங்குவதற்குகூட வீடு இல்லை: கண்ணீர்மல்கும் கஜேந்தினி

தமிழீழப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன்! உறங்குவதற்குகூட வீடு இல்லை: கண்ணீர்மல்கும் கஜேந்தினி

தமிழீழப் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கைக்காக தேசிய மட்டத்தில் விளையாடுகின்றேன், ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அப்படிடை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாத சொல்லொண்ணா நிலையில் வாழ்ந்து வருகின்றேன் என ராசா கஜேந்தினி தெரிவித்தார்.
கடந்த வாரங்களில் இளையோர் கொண்ட கபடி அணிக்கு தேசிய ரீதியில் தமிழர் சார்பாக தமிழ் பேசும் பெண்ணாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வீராங்கனை தான் மட்டக்களப்பு கிரான் கிழக்கு விஸ்ணு ஆலய வீதியிலுள்ள கஜேந்தினி.
தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்னை இன வீரர்களில் ஒருவளாக தனது தைரியத்தினாலும், முயற்சியினாலும் இன்று ஈராக் நாட்டில் விளையாடி தாயக தேசத்திற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஓலைக் குடிசையில் அதுவும் பூரணப் படுத்தப்படாத குடிசையில் இருந்து கொண்டு தேசிய அணியில் விளையாடும் கஜேந்தினியின் வாழ்கையிலும் நாட்டில் நடந்த யுத்த கனங்கள் விட்டுவைக்கவில்லை.
தனது பாசத்துக்குரிய அண்ணா விடுதலைப் போராட்டத்தின்போது இறுதி யுத்தத்தில் பறிகொடுத்துள்ள சம்பவத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
என்னுடைய அண்ணா இருந்திருந்தால் எங்கள் குடும்பத்தை இந்த நிலைக்கு வைத்திருக்க மாட்டார்.
ஏனையவர்களைப் போல் நாங்களும் ஓரளவு சந்தோசமாக இருந்திருப்போன் என தெரிவித்தாள்.சிறு வயதிலே தனது தந்தை நோயினால் அவதியுற்று இறந்து விட்டார், இந்த குடிசையில் நான் உட்பட பதினொராம் தரம் படிக்கும் தம்பி, ஒன்பதாம் தரம் படிக்கும் தம்பி வயது போன எனது அம்மா, எனது அம்மம்மான அனைவரும் வாழ்ந்து வருகின்றோம்.
படிப்பதும் இதில் தான் படுத்துறங்குவதும் இங்குதான், எனது உடை கூட மாற்ற முடியாத ஒரே ஒரு அறை கொண்ட சிறிய குடிசை. என்ன செய்வது எனது அன்பு அப்பா, அண்ணா இப்போது இருந்து இருந்தால் எப்படி இருக்காது என தெரிவித்தார்.
குறித்த வீராங்கனையின் நிலை தெடர்பாக லங்காசிறி 24 சேவை நேரடியாக சென்று அவரின் நிலை தொடர்பாக கேட்டறிந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனது முதலாவது விமானப் பயணம், நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, என்னுடன் பல தமிழ் பேசும் வீரர்கள் தெரிவுக்காக வந்தார்கள்.
அதில் நான் தெரிவு செய்யப்பட்டமை ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த எதிர்கால வெற்றியென நினைக்கின்றேன். மொழியாற்றல் இல்லை, சக வீரர்களுடன் நன்றாக விளையாட மட்டும் கிடைத்தது.
எனக்கும் ஆசைதான் என்னுடன் தேசிய அணிக்காக விளையாடும் சக சிங்கள வீரர்களைப் போல் ஒரு சில வசதிகளை பெற்றுக்கொள்ள, என்ன செய்வது, போடுவதற்கு ஒழுங்கான உடை மாற்றிப்போட சப்பாத்து போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் இருக்கின்றேன், பெருமூச்சு விட்டு இருப்பதைக் கொண்டு விளையாட வேண்டிய வறுமை நிலையில் தற்பொழுதுள்ளேன்.
நான் முழுக்க முழுக்க கிரான் ஐக்கிய விளையாட்டு கழத்திற்கு விளையாடி வருகின்றேன்.
பெரும்பான்மை இன வீரர்களின் கடும் சவாலுக்கு மத்தியில் நான் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதும் எனது விளையாட்டு கழகம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சேர்ந்து எனக்கு போக்குவரத்து பணம் போன்றவற்றை சேர்த்து ஈரக்கில் நடைபெற்ற போட்டிக்கு வழியனுப்பி வைத்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
புல் தரையிலும் மண் தரையிலும் கிராமத்தில் கபடி விளையாடி நான் இன்று தேசிய ரீதியில் காப்பட்டில் விளையாடுகின்றேன்.
எனது குடும்ப நிலை தொடர்பாக உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.
எனவே எமது தமிழ் தேசத்து உறவுகள் எனது குடும்ப நிலையினை அறிந்து எனக்கு உதவி செய்யுங்கள், நான் அதனை வரவேற்கின்றேன்.
என்றும் உங்களை மறக்கமாட்டடேன், எனது ஆசை என்னைப் போன்ற பல தமிழ் வீரர்களை எமது தமிழ் தேசத்தில் இருந்து தேசிய ரீதியாக கொண்டு செல்வது அதனை நான் என்னால் இயன்றவரை திறன்பட நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.
ஈராக்கில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டிக்கு இலங்கைக்கான இளையோர் கபடி அணி கடந்த 10ம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டு ஈரானில் 13,14,15 திகதிகளில் இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளுடன் விளையாடி இறுதிச் சுற்றுக்குச் சென்று, மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதகக்கதைப் பெற்று நாடு திரும்பியதுடன்,
தேசிய ரீதியில் விளையாடி வெண்கலப் பதக்கத்தை பெற்று கிரான் பிரதேசத்திற்கு வருகை தந்த கஜேந்தினிக்கு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாகனப் பேரணியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த நிகழ்வொன்று நேற்று இரவு கிரானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு
பெயர் : ராசா கஜேந்தினி:- 0094756039044
வங்கி : மக்கள் வங்கி, கிளை கிரான்
கணக்கு இலக்கம் : 102-2-001-2-0020654
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |