Home » » மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள் அவர்களது சில கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிருவாகம், அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பல்கலைக் கழக வாழாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பிற்பகல் தொடக்கம் வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் சத்தியக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்களாகிய நாங்கள் எங்களது உரிமையான கல்விச் சுற்றுலா விடயத்தில் பல்கலைக் கழக நிவாகத்தினல் அக்கறையின்றிச் செயற்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது எமது கல்விச் சுற்றுலா கடந்த 2 மாத காலமாக பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றது. இவற்றால் எமது பரீட்சைகள், மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிக்கப் படுகின்ற நிலமை காணப்படுகின்றது. இவற்றைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
விடுதிகளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை, நிருவாக அடக்குமுறை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப் படுகின்றன. மாணவர்களின் கல்விசார் பிரச்சனைகள் தொடர்பில் நிருவாகத்தினர் அலட்சியம், போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமது உரிமையை கோரிபோது தம்மை பல்கலைக்கழகத்தினை விட்டு நிக்கிவிடுவோம் என சிலர் மிரட்டியதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது நியாயமான உரிமைகள் வென்றெடுக்கும் வரையில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.hy

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |