Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட பிரதிநிதி மோனிகா பிண்டோ மற்றும் சித்திரவதை மற்றும் கொடூரமான மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்கள் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட பிரதிநிதி ஹுவான் ஈ மெண்டஸ் ஆகிய இருவரும் இலங்கை வருகின்றனர்.
எதிர்வரும் 07ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்கள் இருவரும், நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் மற்றும் சித்திரவதை மற்றும் வேறு வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தக்கூடிய நடத்தை அல்லது தண்டனைகளை அடையாளம் காண்பதில் இருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments