Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு1.5 பில்லியன் டொலர் கடன்;அனைத்துலக நாணய நிதியம் இணக்கம்

பொருளாதார மறுசீரமைப்புக்கு இலங்கைக்கு  உதவும் வகையில், 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம்  அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு, அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின்  சிறிலங்காவுக்கான பிரதிநிதி ரொட், ஸ்னேய்டர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் துவக்கத்தில் நடக்கவுள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றக் குழுக் கூட்டத்தில் இந்தக் கடனுக்கான அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments