இலங்கையின் அரச ஊழியர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பிலான ஒரு திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது .
அரச ஊழியர்களுக்கு மூன்று வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
ஆறு வருட சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு முதல், வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்று மேலும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்மொழியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், பொறியளாளர்கள் , அரச ஊழியர்கள் , பொது ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் படி வாகன அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
0 Comments