காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்டி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி கே.அமலநாதன் செலுத்தி வந்த ஜீப் மற்றும் முச்சக்கரவண்டி போன்ற வாகனங்கள் மோதிய போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காத்தான்குடி-06, பிரதான வீதி இரும்புத் தைக்கா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பயணிகள் உட்பட 5 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments