வாகன சாரதிகளினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்ட தவறுகளுக்கான புள்ளியிடும் முறைமை இவ்வருட நிறைவுக்குள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த முறைமை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட சில இடர்பாடுகளினால் அதனை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமல் போனது.
சிக்கல்களை நீக்கிக் கொண்டு இவ்வருடம் முடிவதற்குள் அம்முறையை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.
இந்து முறைமையின் கீழ், சாரதிகள் விடும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த புள்ளிகள் ஓர் எல்லையைத் தாண்டும் போது, அது குறித்து சாரதி விசாரிக்கப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரம் ரத்து செய்தல், தண்டப் பணம் விதித்தல், தண்டனை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
0 Comments