நாட்டின் பாரியளவிலான போதைப் பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து மாலைதீவு ஊடாக இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினர் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடும் வலையமைப்பின் முக்கிய நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு பொலிஸாரினால் தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த மாதம் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 175 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களும், 53 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் விநியோகம் செய்யும் வலையமைப்பு, உள்நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் போதைப் பொருள் விநியோகம் செய்யும் தரப்பினர் அதற்காக பயன்படுத்தப்படும் அதி சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நபர்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டிலிருந்து தப்பி;ச் சென்றுள்ள பாரியளவிலான ஐந்து போதைப்பொருள் வர்த்தகர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பொலிஸ் உயரதிகாரி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
0 Comments