Home » » தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள்.
இப்படி இதனை தினமும் சாப்பிட்டு வந்ததாலோ என்னவோ, நோய்கள் அவர்களை அண்டவே இல்லை எனலாம். அந்த அளவில் வெந்தயம் உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி வந்தது. அதிலும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், இதனை கோடையில் தினமும் சாப்பிட்டால் இன்னும் நல்லது.
சரி, இப்போது கோடையில் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு நன்மைப் பெறுங்கள்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு
வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய்
ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
மாதவிடாய் பிடிப்புகள்
வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
உடல் சூடு
கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
கொலஸ்ட்ரால் குறையும் ஆய்வுகளில் வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
செரிமானம்
செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள்
வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
கல்லீரல்
கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |