Advertisement

Responsive Advertisement

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அனுமதி

அரச சேவையில் தற்போது பெறப்படும் அடிப்படை சம்பளத்துக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள விசேட கொடுப்பனவு மட்டும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேர்தல் வாக்குறுதியின் படி வழங்கப்பட்ட 10,000 கொடுப்பனவுகளை மாதாந்தம் கட்டம் கட்டமாக சம்பளத்தில் சேர்க்கும் வகையில் அரச சேவையின் சம்பள திருத்தங்கள் 2016 வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவின் சிபார்சின் பெயரில் மற்றும் நிதி அமைச்சின் விருப்பத்திற்கிணங்கவும் தயாரிக்கப்பட்ட சம்பள திட்டம் 2016-01-01 திகதி முதல் அமுல்படுத்தவும் அதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்  ரன்ஜித் மத்துமபண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments