Advertisement

Responsive Advertisement

தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்தும் போராடுவோம்: சிறி மோகன்

கௌதம புத்தன் பெயரால் தன்னை ஒரு புனிதனாக காட்டிக்கொண்ட துறவியால் தான் முதலில் துப்பாக்கி ஏந்தி இனமுறுகல் நிலை ஏற்பட்டது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறி மோகன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு யாப்பு உருவாக்கம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன வேறுபாடு இன்றி பல இலட்ச கணக்கான மக்களை இழந்துள்ளோம்.

வெள்ளையர்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடியவர்களில் ஒருவனே பண்டார வன்னியன் அவனுக்கென்று ஒரு வீரம் உண்டு. கப்பம் கொடுத்து பிச்சை ஏந்திய மன்னன் அல்ல அவன்.

அதேபோன்று தான், அரசியலமைப்பு மாற்றம் என்ற போர்வையில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்பவர்கள் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

தற்போதைய அரசாங்கத்தின் அரசியலமைப்பு, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் இல்லையெனில், நாம் தனித்தே வாழ தொடர்ந்தும் போராட வேண்டிய நிலை ஏற்படும்.

Post a Comment

0 Comments