Advertisement

Responsive Advertisement

இலங்கை தீவு முழுவதும் மின்சாரம் இல்லை - சீரற்ற காலநிலையே காரணம்

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த மின் வெட்டு தொடர்பான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
மேலும், மின்சாரத் தடை காரணமாக அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள்,வைத்தியசாலை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையே காரணம்
இலங்கை மின்சார சபையை தொடர்பு கொண்டு வினவிய போது,
மேற்படி மின்சார தடை சீரற்ற காலநிலை காரணமாகவும் பலத்த இடியின் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்தனர்.
மேலும், இன்னும் மூன்று மணித்தியாலங்களுக்குள் மின்சாரத்தை மீளவும் வழமை நிலைக்கு மாற்ற மின்சார சபை ஊழியர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments