கொலை செய்யப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை நிரூபணமாகியுள்ளதால், அதனை குற்றமாக கருதி கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால் இன்றைய தினம் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட 6 அறிக்கைகளை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த உத்தரவை விடுத்தார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என 16 பேர் விரைவில் கைதாகலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுரா திசாநாயக்க உட்பட பலர் அடுத்த சில தினங்களில் கைதாகலாம் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments