Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

களுத்துறையில் பாடசாலை மாணவன் கடத்தல் முயற்சி முறியடிப்பு

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவரை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் களுத்துறை, கட்டுகுருந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவர் நாடகம் மற்றும் அரங்கியற்கலை தொடர்பான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றி விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது வான் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் மாணவனை இழுத்து வானுக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கடத்தல்காரர்களின் முயற்சியை முறியடித்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments