Advertisement

Responsive Advertisement

வாழ்நாள் முழுதையும் அர்ப்பணிப்பேன்! மெக்கல்லம் உருக்கமான பேச்சு (வீடியோ இணைப்பு)

நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரண்டன் மெக்கல்லம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதற்கு பின் வீரர்கள் பற்றிய பேசிய மெக்கல்லம், கடந்த சில ஆண்டுகள் மகிழ்ச்சியானவை என்று கருதுகிறேன். நாம் சில சாதனைகளை செய்துள்ளோம், சில போட்டிகளில் தோற்றுள்ளோம்.
ஆனால் முக்கியமான விஷயம் நாம் நமது ஆன்மாவை திரும்ப பெற்றுள்ளோம். நாம் இணைந்து விளையாடிய நாட்களை என் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இந்த அணி பல சாதனைகளை படைக்கும்.
உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
மேலும் குடும்பம் பற்றி பேசுகையில், குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் சாதனைகள் புரிய இயலாது, கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சிரமமானது.
கடந்த 14-ஆண்டுகளாக என் கனவை வாழ்ந்து பார்க்க ஆதரவு கொடுத்தீர்கள். லிஸ் நான் உன்னிடம் கூறியது போல் என் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்து இந்த கடனை திருப்பி அடைப்பேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments