கல்முனை பொலிஸ் பிரிவில் கல்முனைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் இனம்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சாஹிபு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் ஞாயிறு அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த அசம்பாவிதத்தினால் வீட்டின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
தங்க வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வீட்டிலேயே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



0 Comments