Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய வேண்டும்!- ஜனாதிபதி

எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வெற்றியின் ஒட்டு மொத்த அறுவடையை பெற்றுக்கொள்ள கூட்டாக இணைந்து நம்பிக்கையுடன் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பெரும் எண்ணிக்கையிலான அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் எம்மத்தியில் காணப்படுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் நாமும் எமது எதிர்கால சந்ததியினரும் திருப்பு முனையான ஒர் பயணத்தை ஆரம்பித்திருந்தோம்.
அந்த பயணத்தை வலுவானதாகவும் நிலையானதாகவும் மாற்றி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதனைப் போன்றே ஜனநாயகம், சர்வதேசத்தின் நட்பு, நல்லிணக்கம் போன்ற நல்ல பலன்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்.
நீங்கள் வழங்கிய ஆதரவும் உங்களது திடசங்கற்பமுமே இவ்வாறான நலன்களை அனுபவிக்க வழியமைத்துள்ளது.
உங்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றி 2015ம் ஆண்டை வெற்றியாண்டாக மாற்றியிருந்தோம்.
2016ம் ஆண்டு உங்களுக்கும் எனக்கும் வேலைப்பளு நிறைந்த ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
22 மில்லியன் மக்களுக்காக நாம் ஆரம்பித்த பாரிய திட்டங்கள் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
புத்தாண்டில் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments