Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு

ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட உடனேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்.
தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், தாஜூடீனின் மரணம் கொலை என இதுவரையில் நீதிமன்றம் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்கவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அண்மையில் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாஜூடீன் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments