Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருணா , பிள்ளையான் ,கே.பி சுதந்திரமாக இருக்கையில் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது : ஜனாதிபதி கேள்வி

12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்தும் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணா , பிள்ளையான் மற்றும் கே.பி போன்றோரை விடுலை செய்து சலுகைகளை வழங்கியிருக்கையிலும் தம்மால்  அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெீப்பியுள்ளார்.
நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டிருந்த அவர் அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷவினால் கருணா , பிள்ளையானுக்கு விடுதலை வழங்கி அவர்களுக்கு முதலமைச்சர் , அமைச்சு பதவிகளும் , கே.பிக்கு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டிருந்ததுடன் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்தது. இப்படியிருக்கையில் தற்போது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதில் என்ன தவறு இருக்கின்றது.  இவர்களை பிணையில் விடுதலை செய்வது தேசிய பாதுகப்புக்கு அச்சுறுதலாக அமையாது.  என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments