Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக்கல்வி பாரிய வீழ்ச்சி: பிரதிக் கல்விப்பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக்கல்வி பாரிய வீழ்ச்சி நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி வா.யோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஐந்தாம் தர பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மற்றும் சித்திப்புள்ளிகளைப்பெற்ற மாணவர்களும் பாடசாலையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிக்கல்விப்பணிப்பாளர்,
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பொதுப்பரீட்சை அடைவுகளில் தேசிய பாடசாலைகள் பெரும் பங்கினை வகிக்கின்றது.அந்தவகையில் தேசியபாடசாலைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயம் விளங்கிவருவது பாராட்டுக்குரியது.
ஆரம்பக்கல்வியை பொறுத்தவரையில் இவ்வாறான பாடசாலைகள் பெருமையினை தேடித்தந்தபோதிலும் கிழக்கு மாகாணத்திலேயே ஆரம்பக்கல்வி பாரிய வீழ்ச்சி நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.தரம் ஐந்து பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இறுதியான மாகாணமாக வந்துகொண்டிருக்கின்றது.இது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
ஆரம்பக்கல்வியே மாணவர்களுக்கு அத்திபாரமாக இருப்பதனால் அதனைக்கட்டியெழுப்பு எதிர்கால சந்ததியை வளமுள்ளதாக மாற்றுவதற்கான பொறுப்பு இன்று அனைவருக்கும் உள்ளது.ஆரம்பக்கல்வி சிறப்பாக அமையும்போதே அது உயர் கல்வியில் சிறந்த அறுவடையை வெளிபடுத்தும்.
மாணவர்களின் அடைவ மட்டத்தினை அதிகரிப்பதில் பெற்றோரின் பங்கும் அதிகம் உண்டு.ஆசிரியர்களுடன் பெற்றோர் இணைந்து செயற்படவேண்டும்.
IMG_0001IMG_0004IMG_0031IMG_0038IMG_0043IMG_0091

Post a Comment

0 Comments