ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம ஹற்றன் பிரதான வீதியில் போடைஸ் வழியாக செல்லும் பாடசாலை சேவை பஸ் ஒன்றிலிருந்து தவறி விழுந்த ஸ்டெலா என்ற 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்மணி நேற்று போடைஸ் சந்தியில் பஸ்ஸில் ஏறி உள்ளே நுழையும் பொழுது ஓட்டுனரால் பஸ் முன்னோக்கி செல்ல முயற்சித்த வேளையில் இப்பெண்மணி தவறி விழுந்ததாக சம்பவ இடத்தில் காணப்படும் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த (சீ.சீ.டீ.வீ) கண்காணிப்பு கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை அயலவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












0 Comments